#BREAKING: முன்னாள் முதல்வர் சிபு சோரன் காலமானார்!
ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபுசோரன் காலமானார். இவர் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சித் தலைவரும் ஆவார். அவருக்கு வயது 81.

தலைநகர் டெல்லி கங்காராம் மருத்துவமனையில் ஒரு மாதத்துக்கும் மேலாக சிபு சோரன் சிகிச்சை பெற்று வந்த நிலையில, கடந்த ஒரு சில நாள்களாக உடல்நிலை மோசமடைந்திருக்கும் நிலையில் இன்று காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிபு சோரன் காலமானது குறித்து, ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமநத் சோரன் அன்புள்ள திஷோம் குருஜி நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். இன்று நான் எல்லாவற்றையும் இழந்துவிட்டேன் என தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
