BREAKING: பிரதமர் மோடி பிரச்சார வாகனம் மீது செல்போன் வீச்சு... நடந்தது என்ன? வெளிவந்த பரபரப்பு தகவல்கள் !

 
மைசூரு

கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ளதால் அங்கு பிரதமர் மோடி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில், பிரதமர் மோடி முன்தினம் பெங்களூருவில் சாலையில் ஊர்வலமாக சென்று பிரச்சாரம் செய்தார். பின்னர் இரண்டு பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றினார். 

அதன்பின்னர் பெங்களூருவில் இருந்து மாலையில் மைசூரு நகரில் சாலை மார்க்கமாக ஊர்வலமாக சென்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். திறந்தவெளி வாகனத்தில் பிரதமர் மோடியுடன் முக்கிய  நிர்வாகிகள் ஒருசிலர் மட்டும் வாகனத்தில் நின்றனர். வழி நெடுகிலும் பாஜக தொண்டர்கள் மோடியை வரவேற்க சாலையின் இருபுறமும் நின்று கொண்டு அவர் மீது பூக்களை வீசிக் கொண்டிருந்தனர்.


அப்போது கூட்டத்தில் இருந்து பூக்களுடன் சேர்ந்து பிரதமர் வாகனத்தின் மீது செல்போன் ஒன்று வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக பாதுகாப்பு நின்ற அதிகாரிகள், போலீசார் அந்த செல்போனை அப்புறப்படுத்தினர். அதோடு விசாரணையையும் முடுக்கிவிட்டனர். 

இதில், பாஜக தொண்டர் ஒருவர் பிரதமர் மோடியை வரவேற்று பூக்களை வீசும் போது தவறுதலாக பூக்களுடன் செல்போனையும் பிரதமர் வாகனத்தின் மீது எரிந்ததாக கூறப்படுகிறது. அதாவது போலீசார் செல்போன் வீசிய நபரை சுற்றிவளைத்து பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் தவறுதலாக செல்போனை வீசிவிட்டதாகவும் தான் பாஜக தொண்டர்தான் எனவும் கூறியுள்ளார். இதனையடுத்து அந்த நபரை எச்சரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது. எனினும் செல்போன் வீச்சு தொடர்பாக விசாரணை தொடர்கிறது.

மைசூரு

பிரதமரை நோக்கி செல்போன் வீசப்பட்ட போதும் அது அவர் மேல்  விழாமல் வாகனத்தின் முன் பகுதியில் விழுந்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web