திருமணமான ஒரே மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை... கதறும் உறவினர்கள்!

 
மோகன் குமார்

தங்கள் மகளுக்கு ஆசையாசையாய் திருமணம் செய்து வைத்து அழகு பார்த்த பெற்றோர், மகளின் எதிர்கால வாழ்க்கை குறித்து கதறுகின்றனர். பலரும் குடிபோதையிலோ, பொறுப்பாக வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றிக் கொண்டோ இருக்கும் தங்களது மகன், திருமணமானதும் சரியாகி விடுவான் என்று இன்னொரு பெண்ணின் வாழ்க்கையையும் பாழாக்குகிறார்கள். அப்படியானதொரு துயரம் திருப்பூரில் நிகழ்ந்துள்ளது.

திருமணமான ஒரே மாசத்துல புதுமாப்பிள்ளைத் தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் உறவினர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் கே.வி.பழனிசாமி நகரில் வசித்து வருபவர் 34 வயது  மோகன் குமார். இவர்  லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய தந்தை மனோகரன் ஏற்கனவே உயிரிழந்து விட்டார். இந்நிலையில் மோகன் குமாருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மோகன் குமார் தனது தாய் மற்றும் மனைவியுடன்  ஒரே வீட்டில் வசித்து வந்தார்.  

5வது திருமணம்

மோகன்குமார் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். இதனால் தொடர்ந்து திருமணமான நாளில் இருந்தே கணவன்-மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டு வந்தது. வழக்கம் போல இரவு குடிபோதையில் வந்த மோகன்குமாரை அவரது தாயாரும், மனைவியும் சராமாரியாக திட்டித் தீர்த்தனர். இதனால் மனமுடைந்த மோகன்குமார் தனது வீட்டின் விட்டத்தில் மனைவியின் சேலையில் தூக்கில் தொங்கினார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  

ஆம்புலன்ஸ்

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்து  விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான ஒரே மாதத்தில் புதுமாப்பிள்ளை  தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தன்னுடைய எதிர்கால வாழ்க்கைக் குறித்து கனவுகளுடன் காத்திருந்த இளம்பெண், தன்  மகன் குடிக்கு அடிமையானது தெரிந்தும் மூடி மறைத்து திருமணம் செய்து வைத்த இன்னொரு பெண்ணால் வாழ்க்கையைத் தொலைத்து நிற்கிறாள்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!