சூடுபிடிக்கும் பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல்.. போட்டியில் களமிறங்கிய 8 தமிழர்கள்!

 
பிரிட்டன் நாடாளுமன்றம்

கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த ரிஷி சுனக் கடந்த 2022ஆம் ஆண்டு முதல் பிரிட்டன் பிரதமராக பதவி வகித்து வருகிறார்.அவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரியில் முடிவடைகிறது. எனினும், பிரிட்டானிய நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த மே மாதம் 30ம் தேதி பிரிட்டானிய பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

பிரிட்டன்

இந்நிலையில் இன்று பிரிட்டானிய பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. 650 உறுப்பினர்களைக் கொண்ட பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இம்முறை எட்டு தமிழர்கள் போட்டியிடுகின்றனர். பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் உமா குமரன், கவின் ஹரன், மயூரன் செந்தில் நாதன், கமலா குகன், டெவினா பால், நரணி ருத்ரராஜன், கிருஷ்ணா, ஜாஹிர் உசேன் ஆகியோர் வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர்.

பிரிட்டன்

இந்தத் தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. கடந்த 15 ஆண்டுகளாக கன்சர்வேட்டிவ் கட்சி பிரிட்டனை ஆண்டது. இந்த நிலையில், எதிர்க்கட்சியான லேபர் கட்சி ஆட்சிக்கு வந்தால், 15 ஆண்டுகால கன்சர்வேடிவ் ஆட்சிக்கு முடிவு கட்டலாம் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web