வெற்றி யாருக்கு... பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தல் தொடக்கம்!

 
பிரிட்டன்

 2022 முதல் பிரிட்டன் நாட்டின் பிரதமராக ரிஷி சுனக் இருந்து வருகிறார்.இவர்  கன்சர்வேடிவ் கட்சியின் சார்பில் ஆட்சி அமைத்துள்ளார்.  இவரது பதவிக்காலம் 2025 ஜனவரியுடன்  நிறைவடைகிறது. எனினும், பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெறலாம் என அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மே 30ம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக  அறிவிக்கப்பட்டது.

பிரிட்டன்

பிரிட்டனை பொறுத்தவரை கன்சர்வேட்டிவ் மற்றும் தொழிலாளர் கட்சிகள் 2 தான்  ஆதிக்கம் செலுத்துகிறது. இதில் கடந்த 15 ஆண்டுகளாக கன்சர்வேட்டிவ் கட்சிதான் ஆட்சி பொறுப்பில் இருந்து வருகிறது.  5 முறை கன்சர்வேட்டிவ் கட்சியின் பிரதமர்கள் மாறியிருக்கின்றனர்.  ஒரு காலத்தில் உலகையே தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த பிரிட்டன், தற்போது பொருளாதாரத்தில் உலக அளவில் 6வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.  
விலைவாசி உயர்வு, வேலையின்மை, பணவீக்கம் ஆகியவை முக்கிய பிரச்சனையாக உள்ளது.  

பிரிட்டன்

இதனை சரி செய்ய அந்நாட்டு அரசு திணறி வருகிறது. நிலைமை இப்படி இருக்கையில் நாடாளுமன்ற தேர்தல் இன்று காலை தொடங்கியுள்ளது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 650 உறுப்பினர்களை கொண்ட தேர்தலில் 9 தமிழர்கள் களம் காண்கின்றனர். உமா குமரன், கவின் ஹரன், மயூரன் செந்தில் நாதன், கமலா குகன், டெவினா பால், நரணி ருத்ரா ராஜன், கிரிஷ்ணி, ஜாஹிர் உசேன் ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web