அண்ணன் கடனுக்காக தம்பி வெட்டி படுகொலை... பாஜக நிர்வாகி கைது!
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த நடுவிக்கோட்டையில் வசித்து வருபவர் சக்திவேல். இவர் 2 ஆண்டுகளுக்கு முன் பேராவூரணி வடக்கு ஒன்றிய பாஜ தலைவராக இருந்தவர். இவர் மேட்டுவயல் கிராமத்தை சேர்ந்த ராஜேஷ்குமாரிடம் (39) ரூ.15 லட்சம் கடன் வாங்கியதாக தெரிகிறது. அவருக்கு திரும்ப பணத்தை தராமல் சக்திவேல் கடந்த ஒன்றரை ஆண்டாக தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் சிங்கப்பூரில் வேலை பார்த்த சக்திவேலின் தம்பி பிரகதீஸ்வரன் (29), கடந்த 20 நாட்களுக்கு முன் சொந்த ஊர் திரும்பினார். ராஜேஷ்குமார் இரவு சக்திவேல் வீட்டுக்கு சென்று பிரகதீஸ்வரனிடம், அண்ணன் வாங்கிய ரூ.15 லட்சம் கடனை திருப்பி கொடுக்கும்படி கேட்டிருந்தார்.

இதில் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ராஜேஷ்குமார், மறைத்து வைத்திருந்த அரிவாளால் பிரகதீஸ்வரனை ஓட ஓட விரட்டி சரமாரி வெட்டியதில் இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேஷ்குமாரை தேடி வந்த நிலையில் அவர் காவல் நிலையத்தில் நேற்று சரணடைந்தார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
