சினிமா பாணியில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த அண்ணன் தம்பி!

 
நீட் தேர்வு

 தமிழில் கமல்ஹாசன் நடிப்பில வெளியான 'வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.'   படத்தில் ஆள்மாறாட்டம் செய்வர். இதே போல் ஒரு சம்பவம் நடந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அந்த படத்தில் மருத்துவ கல்லூரி நுழைவு தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து வெற்றி பெறுவதைப் போன்ற காட்சி அமைக்கப்பட்டு இருந்தது.  இந்நிலையில் நிஜத்தில் அதே போன்ற ஒரு சம்பவம் ராஜஸ்தானில்   ஜோத்பூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் நடைபெற்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீட்

இந்தக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முதலாமாண்டு படித்து வரும் மாணவர் பகீரத் ராம் விஷ்னோய். இவரது தம்பி கோபால் ராம். இவர்  நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார்.  பகீரத் ராம் விஷ்னோய், தனது ஆதார் அட்டையில் உள்ள புகைப்படத்தை மாற்றிவைத்து, தனது தம்பி கோபால் ராமுக்கு பதிலாக நீட் தேர்வு எழுதச் சென்றார்.  ராஜஸ்தானின் பார்மர் பகுதியில் உள்ள அந்திரி தேவி அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் அவருக்கான தேர்வு மையம் அமைக்கப்பட்டு இருந்தது.  

கைது

அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் காவல்துறையை தொடர்பு கொண்டு, ஒரு நபர் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி வருவதாக புகார் தெரிவித்தார். உடனடியாக  விரைந்து சென்று தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த சகோதரர்கள் பகீரத் ராம் விஷ்னோய் மற்றும் கோபால் ராம் ஆகியோரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web