“அண்ணா... நோ கமெண்ட்ஸ்... கையெடுத்து கும்பிட்டு இமயமலைக்கு புறப்பட்டார் ரஜினி!
இன்று சென்னையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் ஒரு வார பயணமாக இமயமலை புறப்பட்டு சென்றார். அவரிடம் மோடி மற்றும் இளையராஜா குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், கையெடுத்து கும்பிட்டு, ‘அண்ணா... நோ கமெண்ட்ஸ்..” என்று கூறி புறப்பட்டார்.
வேட்டையன்’ படப்பிடிப்பை முடித்துள்ள நிலையில், கடந்த வாரம் அபுதாபி சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த், நேற்று முன்தினம் சென்னை திரும்பினார். இந்நிலையில், இன்று அதிகாலை ஒரு வார கால ஆன்மிக பயணமாக இமயமலை கிளம்பி சென்றார்.

ஒவ்வொரு வருடமும் இமயமலை பாபாஜி குகை, கேதர்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட இடங்களுக்கு ஆன்மிக சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் ரஜினி. உடல்நிலை மற்றும் கொரோனா காரணமாக சில வருடங்கள் செல்லாமல் இருந்த நிலையில், கடந்த வருடம் முதல் மீண்டும் தனது இமயமலை பயணத்தைத் தொடங்கினார்.
இன்று அவர் இமயமலை கிளம்பி சென்ற போது பத்திரிக்கையாளர்கள் சந்தித்து, அவரது இமயமலை பயணம் குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது, தனது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறினார்.

மோடி மீண்டும் ஆட்சியைப் பிடிப்பாரா என்று கேட்டதற்கு ”அரசியல் கேள்விகள் வேண்டாமே” என்றார்.
ஒருவார கால ஆன்மிக பயணத்தை முடித்துவிட்டு ஜூன் மாதம் முதல் வாரத்தில் சென்னை திரும்புகிறார். பின்பு, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘கூலி’ படத்தில் நடிக்கிறார் ரஜினி.
இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை காப்புரிமை சர்ச்சையைக் குறித்து, “பாடல் பெரிதா? இசை பெரிதா?” என்று கேட்டதற்கு பத்திரிக்கையாளர்களைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டு சிரித்துக் கொண்டே, “அண்ணா, நோ கமெண்ட்ஸ்!” என்றார் ரஜினி.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
