பக்கவாதத்தில் படுத்த படுக்கையாக இருந்த தம்பி.. உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் அம்மா வெறிச்செயல்!

 
சந்தோஷ்

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் அருகே வஞ்சிக்கடவு பகுதியில் வசித்து வந்தவர் சந்தோஷ் (45). கடந்த இரண்டரை ஆண்டுகளாக பக்கவாதத்தால் படுத்த படுக்கையாக இருந்தார். இவரை அவரது சகோதரி ஷீபா (50) கவனித்து வந்தார். இதற்கிடையில், ஷீபா மற்றும் செபாஷ்டின் (49) இடையே பழக்கம் ஏற்பட்டு இறுதியில் அது கள்ளக்காதலாக மாறியது.

காதல்

இருவரும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சந்தோஷுடன் ஒரே வீட்டில் இருந்ததால், இவர்களின் கள்ளக்காதல் உறவுக்கு இடையூறு ஏற்பட்டதால் அவரைக் கொல்ல முடிவு செய்துள்ளனர்.அதன்படி இருவரும் சந்தோஷை கழுத்தை நெரித்து கொன்றனர். அதன்பிறகு அக்கம்பக்கத்தினரிடம் ஷீபா, தனது சகோதரர் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டதாக தெரிவித்தார். ஆனால் அவரது கழுத்து மற்றும் உடலில் காயங்கள் இருந்ததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

கொலை

தகவலின் பேரில் திருச்சூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சந்தோஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே போலீசார் விசாரணை செய்வதை அறிந்த செபாஸ்டியன் பயத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில் மேற்கண்ட தகவல் தெரிய வந்தது. இதையடுத்து ஷீபா, செபாஸ்டியன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web