நாயை கிண்டல் செய்த பக்கத்து வீட்டுக்காரரின் மூக்கை அறுத்த சகோதரர்கள்!

 
நாய்

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் வசித்து வருபவர்  சதீஷ். இவரது சகோதரர் அமித். அமித்திற்கு திருமணமாகி துஷார் என்ற மகன் உள்ளார். இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். சகோதரர்கள் தங்கள் வீட்டில் செல்லப்பிராணி நாய் வளர்த்து வந்தனர்.  சதீசின் பக்கத்து வீட்டுக்காரர் தேவேந்திரா. இவரது மனைவி முன்னி தேவி.  

நாய்
சதீஷ் வீட்டில் வளர்த்துவந்த செல்லப்பிராணி நாய் ஜூலை  8ம் தேதி தேவேந்திரா வீட்டின் அருகே நின்று குரைத்துள்ளது.  நாயை கிண்டல் செய்து தேவேந்திரா பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் தனது சகோதரன் அமித் உடன் சேர்ந்து தேவேந்திரா வீட்டிற்கு சென்றுள்ளார்.   அவரது மனைவியிடம்  சகோதரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அத்துடன் அவர்களை கொடூரமாக தாக்கியுள்ளனர். 

நாய்

மேலும், அங்கிருந்த கத்தியை கொண்டு தேவேந்திராவின் மூக்கை சகோதரர்கள் அறுத்துள்ளனர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். உடனடியாக தாக்குதலில் காயமடைந்த தேவேந்திரா மற்றும் அவரது மனைவியை மீட்ட அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சகோதரர்கள் சதீஷ், அமித்தை கைது செய்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?