மாற்றுத்திறனாளியை கொடூரமாக தாக்கிய விவகாரம்.. போலீஸ் ஏட்டு மீது பாய்ந்தது வழக்குப்பதிவு!
ஜனவரி 1ம் தேதி இரவு மன்னார்குடியில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் மன்னை எக்ஸ்பிரஸ் ரயில் திருவாரூர் ரயில் நிலையத்தில் நின்றது. அங்கு, மாற்றுத்திறனாளிகளுக்கான ரயில் பெட்டியில், ரயில்வே காவலர்கள் எனக் கூறி, மூன்று பேர் ஏறினர். அப்போது, கதவு திறக்கப்படவில்லை எனக் கூறி, ஒரு கால் முற்றிலும் துண்டிக்கப்பட்ட மாற்றுத் திறனாளியை, காவலர் ஒருவர் தாக்கினார்.
மாற்றுத்திறனாளி மீது தாக்குதல் - தலைமைக் காவலர் மீது வழக்குப் பதிவு #Thiruvarur | #Police | #Attack | #Train pic.twitter.com/q2R9EcBfFR
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) January 3, 2025
இதுகுறித்து, சம்பந்தப்பட்ட நபர், தாக்கிய வீடியோவை காட்டி, ரயில்வே காவலர்களிடம் புகார் அளித்துள்ளார். ஆனால், உடனடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. பின்னர், மன்னை எக்ஸ்பிரஸ் ரயில் விழுப்புரம் ரயில் நிலையத்தில் நின்றபோது, இரண்டாம் வகுப்பு பெண் காவலர் பாதிக்கப்பட்டவரின் முகவரியை மட்டும் பெற்று அனுப்பி வைத்தார்.
இதையடுத்து, ரயிலில் பயணித்த மாற்றுத்திறனாளி காவலர் எனக் கூறி தாக்கியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து மாற்றுத்திறனாளியை தாக்கிய காவலாளி நீடாமங்கலம் காவல் நிலையத்தில் பணிபுரியும் பழனி என்பது தெரியவந்துள்ளது. எனவே, திருவாரூர் ரயில்வே போலீஸார் தானாக முன்வந்து காவலர் பழனி மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!