பெண் கழுத்தை அறுத்து கொடூரக்கொலை..கள்ளக்காதலால் விபரீதம்!

 
ச்

 
 
கிருஷ்ணகிரி மாவட்டம் டேம் ரோடு சின்னமுத்தூர்  மேட்டு கொல்ல கொட்டாய் கிராமத்தில் வசித்து வருபவர் 40 வயது பழனி.  இவர் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி 36 வயது சத்யா.  18 வயதில்  திருப்பதி  ,  16 வயதில் கேசவன் என 2 மகன்கள்  . பழனியின் அக்காள் மகன் தர்மபுரி மாவட்டம் குண்டாங்காட்டில் வசித்து வருபவர் 25 வயது மாரியப்பன். அதே பகுதியில் உள்ள பேக்கரி கடையில் பணிபுரிந்து வந்தார். இவர் பழனியின் வீட்டில் தங்கி இருந்தார்.

பலாத்காரம் காதல் கள்ளக்காதல்
அவருக்கும், சத்யாவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலானது. இதை அறிந்த பழனி மற்றும் அவருடைய மகன்கள், சத்யாவை கண்டித்தனர். ஆனாலும் சத்யா கண்டுகொள்ளவில்லை.  பழனி, வேலைக்கு சென்ற பிறகு அவருடைய மகன்களும் வெளியே சென்று விட்டனர். வீட்டில் சத்யா இருந்த சமயத்தில் திடீரென  சத்யாவின் வீட்டில் இருந்து  அலறல் சத்தம் கேட்டது. இதை கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு ஓடிச்சென்று பார்த்தனர்.

ஆம்புலன்ஸ்
அங்கு கட்டிலில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சத்யா பிணமாக கிடந்தார். அருகில் மாரியப்பன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் படுகாயத்துடன் கிடந்த மாரியப்பனை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சத்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் மாரியப்பன் சிகிச்சை பெற்று வருகிறார்.


 பழனி மற்றும் அவரது மகன்கள் வீட்டில் இல்லாத நேரத்தில் மாரியப்பன் சத்யாவின் வீட்டிற்கு வந்து அவருடன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. அந்த நேரம் வீட்டுக்கு வந்த சத்யாவின் மகன்களோ, கணவனோ சத்யாவை கொலை செய்து விட்டு அவருடைய கள்ளக்காதலனின் கழுத்தை அறுத்தார்களா? அல்லது மாரியப்பன் சத்யாவின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தாரா? என்பது தெரியவில்லை. இருந்தாலும் கொலையாளி யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!