மகன் இறந்த அதே இடத்தில் கொடூரம்... ரயில் முன் பாய்ந்து தந்தையும் தற்கொலை!

 
ரயில்


அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து டிரைவர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மகன் தற்கொலை செய்து கொண்ட அதே இடத்தில் தந்தையும் உயிரை மாய்த்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

திருநெல்வேலி

திருநெல்வேலி அருகே முன்னீர்பள்ளம் மருதம் நகர் ரயில்வே தண்டவாளத்தில் நேற்று அதிகாலை ஆண் ஒருவரின் உடல் கிடந்தது. இது குறித்து தகவல் அறிந்து நாகர்கோவில் ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சடலமாக கிடந்தவர் முன்னீர்பள்ளம் மருதம்நகரை சேர்ந்த ஜெயசீலன் (59) என்பது தெரியவந்தது. லாரி ஓட்டுநரான இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இவரது 2வது மகன் சதீஷ் பாளையங்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மருதம்நகர் ரயில்வே தண்டவாளம் பகுதியில் ரயில் முன் பாய்ந்து சதீஷ் தற்கொலை செய்து கொண்டார்.  

சொந்த சகோதரனை அடித்தே கொலை செய்த கொடூர அக்கா!! பிணம்

மகன் இறந்த தகவல் கேட்டு வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய ஜெயசீலன் தனது மகன் உயிரிழந்ததை நினைத்து தினமும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் நேற்று மருதம்நகர் ரயில்வே தண்டவாளத்திற்கு அருகே உள்ள தோட்டத்திற்கு செல்வதாக கூறிவிட்டு வந்த அவர், அந்த வழியே சென்னையில் இருந்து நெல்லை வழியாக கொல்லம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் வந்த நிலையில், மகன் தற்கொலைச் செய்துக் கொண்ட அதே இடத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலைச் செய்து கொண்டது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!