கொடூரம்.. சகோதரிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த அண்ணன்.. வீடியோவை காட்டியும் மிரட்டல் !

 
பிபின் பிரியன்

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி கொல்லன் விளை பகுதியைச் சேர்ந்தவர் பிபின் பிரியன் (29). இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளது. அதேடு காவல்நிலையங்களில் பல்வேறு வழக்குகளுடன் குற்ற சரித்திர ரவுடி பட்டியலிலும் பிபின் பிரியன் உள்ளார்.

தற்போது அரசியல் பிரமுகர் ஒருவருக்கு கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது பெரியப்பா மகள் பொறியியல் பட்டப்படிப்பு முடித்துள்ளார். இந்த பெண்ணுக்கு உடன் பிறந்த சகோதரர்கள் இல்லாததால், அண்ணன் முறையான பிபின் பிரியனுடன் சகோதரன் முறையின் பழகி வந்துள்ளார். 

அவரும் இளம்பெண்ணை கல்வி நிலையங்களுக்கு பைக்கில் அழைத்து செல்வது, பல்வேறு உதவிகளை செய்வது என வாடிக்கையாக வைத்துள்ளார். இந்த நிலையில், கடந்த மார்ச் 10ஆம் தேதி இளம்பெண் ஆலங்கோடு பகுதியில் வீட்டிற்கு செல்வதற்காக நின்று கொண்டிருந்தார்.

பிபின் பிரியன்

அந்த வழியாக காரில் சென்றபோது இதனை கவனித்த பிபின் பிரியன், இளம்பெண்ணை வீட்டிற்கு அழைத்துச்செல்வதாக கூறி காரில் ஏற்றியுள்ளார். ஆனால் அவர் வீட்டிற்கு அழைத்து செல்லாமல், தமது நண்பர் ஒருவரது வீட்டிற்கு கூட்டிச்சென்றார். அங்கு நண்பரை பார்த்துவிட்டு உடனே வீட்டுக்கு செல்லலாம் என வீட்டுக்குள் அழைத்துச்சென்று குளிர் பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார். இதில் இளம்பெண் மயங்கிய நிலையில், சகோதரி என்றும்கூட பார்க்காமல் பிபின் பிரியன் இளம்பெண்ணை  பாலியல் பலாத்காரம் செய்ததோடு அதை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

அதன்பின்னர் வீட்டுக்கு இளம்பெண்ணை அழைத்துச்சென்றான். பாலியல் பலாத்காரம் செய்த வீடியோவை இளம்பெண்ணிற்கு அனுப்பி வைத்து இணையத்தில் பரப்பாமல் இருக்க வேண்டும் என்றால், நான் அழைக்கும் போதெல்லாம் உல்லாசமாக இருக்க வரவேண்டும் என மிரட்டி வந்துள்ளார். அதற்கு இளம்பெண் மறுப்பு தெரிவிக்கவே கொலைமிரட்டலும் விடுத்துள்ளார்.

பிபின் பிரியன்

இதனால் அச்சமடைந்த அவர், துணிச்சலுடன் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மிரட்டல் ஆடியோ, வீடியோவுடன் புகாரளித்தார். இதையடுத்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ரவுடி பிபின் பிரியனை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web