பெருந்துயரம்... இங்கிலாந்து மன்னர் சார்லஸின் இறுதி சடங்கு நிகழ்ச்சிகளை திட்டமிடும் பக்கிங்ஹாம் அரண்மனை!

 
சார்லஸ்

 சோகம்... யார் கண்பட்டதோ தெரியவில்லை... 70 வயது வரை காத்திருந்து இங்கிலாந்தின் மன்னராக பதவியேற்றுக் கொண்டார் சார்லஸ் . அவரது  பதவியேற்பு முதலே அடுத்தடுத்த சர்ச்சைகள் வலம் வர துவங்கியது. முட்டையை எடுத்து மன்னர் மேல் வீசுவது போன்ற நிகழ்வுகள் நடந்தன. பதவியேற்ற சில மாதங்களிலேயே மன்னர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக  அதிகாரப்பூர்வ தகவலை பக்கிங்க்ஹாம் அரண்மணை வெளியிட்டது. மன்னர் விரைவில் குணமடைய சிறப்பு பிரார்த்தனைகள் செய்யப்பட்டன. மீண்டு வர வேண்டும் என உலக தலைவர்கள் எழுச்சி அறிக்கைகள் வெளியிட்டனர்.

சார்லஸ்

மன்னர் சார்லஸ் அதற்கு பிறகும்  தொடர்ந்து புன்னகையுடன் மக்களிடம் முகம் காட்டி வருகிறார். ஆனால் உண்மையில், மன்னர் சார்லசின் உடல் நிலை மோசமடைந்து வருவதாக அரண்மனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து விசாரித்தால் மன்னர் திடீரென  மரணமடையும் பட்சத்தில், அவரது இறுதிச்சடங்கை எப்படி நடத்துவது என்பது குறித்த திட்டம் தயாராகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மற்ற நாடுகளில் தலைவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டால்  அவர்களுடைய மரணம் குறித்து ஊடகங்கள் எதுவும் பேசுவதில்லை. ஆனால், மேலை நாடுகளை பொறுத்தவரை  திடீரென நாட்டின் தலைவர் மரணமடைந்தால், அவரது இறுதிச்சடங்கை எப்படி நடத்தலாம் என்பது குறித்த தகவல்கள்  வெளிப்படையாக ஊடகங்களில் அலசி ஆராயப்படும்.  

சார்லஸ் கமீலா


அவ்வகையில், இங்கிலாந்து  மன்னர் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அவரது இறுதிச்சடங்கு குறித்து அவரது உதவியாளர்கள் திட்டமிட்டு வருகின்றனர். அந்த திட்டத்துக்கு, Operation Menai Bridge என பெயரிடப்பட்டுள்ளதாக இங்கிலாந்து ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.  
இதற்கிடையில், மன்னர் எப்படியாவது புற்றுநோயிலிருந்து மீள வேண்டும் என போராடி வருகிறார்.  எல்லோரும் நல்லதே நடக்கும் என்ற எண்ணங்களுடன் தான் இருக்கிறார்கள். ஆனால், உண்மையில், மன்னர் உடல் நிலை மிக மிக மோசமாக உள்ளது என்கின்றனர்  பக்கிங்காம் அரண்மனைவாசிகள்.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web