பயங்கர ஆயுதத்துடன் சமூக வலைதளங்களில் பில்டப்.. போலீசாரிடம் சிக்கிய தமிழக இளைஞர்கள்!

 
களக்காடு

சமூக வலைதளங்களில் மோகம் நிறைந்த இன்றைய காலக்கட்டத்தில், இளைஞர்கள் பலரும் விபரீதமான செயலில் ஈடுபட்டு அதனை வீடியோவாக பதிவுசெய்து பதிவிட்டு வருகின்றனர். பல நேரங்களில் இது ஆபத்தில் முடிந்து விடுகிறது. வன்முறை போன்ற செயல்களுக்கும் வழிவகுக்கிறது.

இதனால் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீடியோ, புகைப்படம் வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், களக்காடு அருகே கைகளில் வாளுடன் புகைப்படம் எடுத்து சமூகவலை பக்கத்தில் வெளியிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். 

களக்காடு

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள பத்மநேரி கிருஷ்ணன் கோயில் தெருவை சேர்ந்தவர்கள் ஆனந்த கிருஷ்ணன் (18), வானமாமலை (27), ராம்குமார் (18). இவர்கள் மூன்று பேரும் நண்பர்கள் ஆவர். 

களக்காடு

மூவரும் கைகளில் பெரிய வாளை ஏந்திபிடித்து புகைப்படங்களை வெளியிட்டு, அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வாசகங்களையும் பதிவு செய்துள்ளதாக தெரிகிறது. இது தொடர்பான வீடியோ வைரலானது. இதுசம்பந்தமாக களக்காடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி மேற்கண்ட 3 பேரையும் கைது செய்தனர்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web