இந்தியாவில் புல்லட் ரயில்.. ஜப்பானில் இருந்து முதல்வர் ட்வீட்!

 
புல்லட் ரயில் ஸ்டாலின் ஜப்பான்

சிங்கப்பூரில் இருந்து ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின், ஜப்பானில் புல்லட் ரயிலில் பயணித்தப்படி எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்து, இந்தியாவிலும் புல்லட் ரயில்களுக்கு இணையான சேவை பயன்பாட்டுக்கு வர வேண்டுமென ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடம் ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்திடவும், முதலீட்டாளர்களை தமிழகத்திற்கு ஈர்க்கும் நோக்கிலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூருக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் பிறகு சிங்கப்பூரில் இருந்து ஜப்பான் நாட்டிற்கு பயணித்துள்ளார். 


இந்நிலையில், ஜப்பானில் நேற்று ஒசாகாவில் இந்திய தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கலாச்சார சந்திப்பு நிகழ்ச்சியில், ஒசாகாவில் வாழும் தமிழர்கள் உள்ளிட்ட இந்திய வம்சாவளியினரை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.

MKS

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பரதநாட்டிய கலைஞர்களுக்கு  தமிழக முதல்வர் நினைவுப் பரிசு வழங்கினார். இதில் ஜப்பான் நாட்டின் முதல் பரதநாட்டிய கலைஞரான 84 வயதான அகிமி சகுராய்க்கு தமிழக முதல்வர் சால்வை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கினார். 

ஜப்பானில் புல்லட் ரயிலில் பயணித்த முதல்வர் ஸ்டாலின், ஏறத்தாழ 500 கி.மீ தூரத்தை இரண்டரை மணி நேரத்திற்குள் அடைந்து விடுவோம். உருவமைப்பில் மட்டுமல்லாமல் வேகத்திலும் தரத்திலும் புல்லட் ரெயில்களுக்கு இணையான ரயில் சேவை நமது இந்தியாவிலும் பயன்பாட்டுக்கு வர வேண்டும். ஏழை - எளிய - நடுத்தர மக்கள் பயனடைந்து, அவர்களது பயணங்கள் எளிதாக வேண்டும் என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

 

From around the web