மூட்டை மூட்டையாக சில்லறைகள்.... மனைவிக்கு ஜீவனாம்சம் தர நீதிமன்றம் வந்த கணவரால் பரபரப்பு!
சமீப காலங்களாக தமிழகத்தில் திரையுலகில் மட்டுமல்லாமல் பொதுமக்களிடையேயும் விவாகரத்து செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டம் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு விண்ணப்பத்திருந்தார் ஒருவர்.
இந்நிலையில் இது குறித்த விசாரணையில் மனைவிக்கு ரூ.2 லட்சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து, தன் மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுப்பதற்காக ரூ.80,000க்கு ரூ1, ரூ.2 நாணயங்களாக 20 மூட்டைகளில் எடுத்து வந்து நீதிபதி முன்னிலையில் வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைப் பார்த்து நீதிமன்றத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைஅந்த நிலையில், "இப்படி நாணயங்களை மூட்டையில் கொண்டு வருவதை ஏற்க முடியாது. இந்த தொகையை ரூபாய் நோட்டாக மாற்றி ஜீவனாம்சம் கொடுங்கள்" என்று நீதிபதி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார். அதன் பின்னர் தான் கொண்டு வந்த 20 மூட்டை நாணயங்களையும் அவர் தனது காரில் எடுத்துச் சென்றார். இந்த சம்பவத்தின் வீடியோவும், புகைப்படங்களும் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!