தார் மெஷின் மீது தனியார் பேருந்து மோதி கவிழ்ந்த பேருந்து... 17 பேர் படுகாயம்!

 
பேருந்து விபத்து

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து பெங்களூர் செல்வதற்காக தனியார் பேருந்து ஒன்று  இன்று அதிகாலை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வழியாக சென்று கொண்டிருந்தது. பேருந்தில்  ஊட்டி, மைசூர் மற்றும் பெங்களூரில் வசித்து வரும்  17 பயணிகள் இருந்தனர். திருநெல்வேலி முன்னீர்பள்ளம் பகுதியில் வசித்து வரும்   காசி  தான் பேருந்து ஓட்டுனர்.  

விபத்து
அதிகாலை 4 மணிக்கு  சத்தியமங்கலம்- அத்தாணி சாலையில் அத்தியப்பகவுண்டன்புதூர் என்ற இடத்திற்கு அருகே பேருந்து  சென்று கொண்டிருந்தது. அப்போது, அப்பகுதியில் விடாதமழை பெய்து கொண்டிருந்ததால் பேருந்து  கட்டுப்பாட்டை இழந்தது. சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தார் மெஷின் மீது மோதி சாலையில் கவிழ்ந்து கோர விபத்து ஏற்பட்டது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக ஓடி வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.  108 ஆம்புலன்சிற்கும் தகவல் தெரிவித்தனர்.

ஆம்புலன்ஸ்

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பேருந்துக்குள் சிக்கிய 17 பயணிகளை பாதுகாப்பாக மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் பயணிகள் யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏதும் ஏற்படவில்லை. உள்காயம் இருக்கலாம் என்பதால் பயணம் செய்தவர்களுக்கு  முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.  அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயணம் செய்த   அனைவரும் உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web