ஓடிக் கொண்டிருந்த பேருந்தில் திடீரென சுருண்டு விழுந்து நடத்துநர் உயிரிழப்பு!

 
ரமேஷ்

சென்னையில், ஓடிக் கொண்டிருந்த பேருந்தில் பணியின் போது திடீரென நடத்துநர் சரிந்து விழுந்து மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவெற்றியூர் மாநகரப் பேருந்தில் நடத்துநராக பணியாற்றி வந்தவர் ரமேஷ் (54). திருவெற்றியூர் ராஜா கடையில் வசித்து வரும் இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து திருவொற்றியூர் வரை செல்லும் தடம் எண் 56சி பேருந்தில் நடத்துநராக பணிபுரிந்து வந்தார்.  

ஆம்புலன்ஸ்

நேற்று ஓட்டுநர் பாண்டியனும் ரமேஷும் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற நிலையில், திடீரென ரமேஷுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதனையடுத்து, அவரை உடனடியாக திருவொற்றியூர் ஆகாஷ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 

போலீஸ்

இந்நிலையில் மருத்துவர்கள் அவரை பரிசோதித்து விட்டு ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக கூறினர். இதன் பிறகு அவரது உடல்  அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.  நடத்துநர் ரமேஷ் உயிரிழப்பு குறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?