பேருந்து மோதி விபத்து; 6 பேர் பலியான சோகம்!

 
 பேருந்து மோதி விபத்து
 

 

கேரளாவில் பேருந்து மோதி விபத்திற்குள்ளானதில் 6 பேர் பரிதாபமாக பலியானார்கள். பேருந்து ஓட்டுநரின் அலட்சியமே விபத்திற்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

கேரள மாநிலம் காசர்கோட்டில் கர்நாடகா பேருந்து மோதியதில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பேருந்து ஓட்டுநரின் அலட்சியமே விபத்திற்கு காரணம் என்பது விசாரணையில் அம்பலமானது.

விபத்து

கேரள மாநிலம் காசர்கோட்டில் கர்நாடக பேருந்து ஒன்று, சாலையோரம் நின்று கொண்டிருந்தவர்கள் மற்றும் ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10 வயது சிறுமி உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர். மேலும் இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர்கள் ஹைதர் அலி (47), கதீஜா (50), ஸ்பாஹுல் ஹமீத்தின் மகள் ஹஸ்னா (10), நபீசா (52) மற்றும் ஆயிஷா ஃபிடா (19) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இந்த விபத்துக்கு, அதிவேகமும், டிரைவரின் அலட்சியமும் தான் காரணம் என்று கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது .

விபத்து

மருத்துவச் செலவுகளை மாநகராட்சி ஏற்கும்.14 வருட அனுபவம் கொண்ட ஓட்டுநர் நிஜலிகப்பா சலவதி இடைநீக்கம் செய்யப்பட்டார். அவர் மீது துறை ரீதியான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக பேருந்து மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

 

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?