பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு!

 
பேருந்து


சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு தனியார் பேருந்து ஒன்று பெங்களூருவுக்கு சென்றுகொண்டிருந்தது. அந்த பேருந்தில் சுமார் 25 பயணிகள் பயணம் செய்தனர். இந்நிலையில், பேருந்து பள்ளிகொண்டா அருகே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, பேருந்தில் இருந்து புகை வெளிவந்தது. 

இதனைக்கண்ட பயணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். பேருந்தில் இருந்து பயணிகள் அவசரமாக வெளியேறினர். இந்நிலையில்  பேருந்து மளமளவென தீப்பிடித்து எரியத்தொடங்கியது. அதிர்ஷ்டவசமாக  பேருந்தில் இருந்தவர்கள் உடனடியாக கீழே இறங்கியதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. 

விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்த போதிலும் பேருந்து முழுமையாகத் தீயில் கருகி நாசம். அடைந்தது.தனியார் பேருந்து நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த‌ சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?