2 மகள்களுடன் கால்வாயில் குதித்து தொழிலதிபர் தற்கொலை... ஆதார் அப்டேட் செய்வதாக கூறி அழைத்து சென்று விபரீதம்!
குஜராத் மாநிலம் காந்திநகர் மாவட்டம் போரிசனா கிராமத்தைச் சேர்ந்த தீரஜ் ரபாரி, பல பெட்ரோல் பங்குகளை நடத்தி வந்த தொழிலதிபரான இவருக்கு ஜான்வி மற்றும் ஜியா என்ற இரு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை, இரண்டு மகள்களையும் காரில் அழைத்துக் கொண்டு ஆதார் கார்டு பதிவு செய்வதற்காக வீட்டிலிருந்து தீரஜ் புறப்பட்டார். ஆனால் இரவு நேரம் ஆனபோதும் மூவரும் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் கவலை கொண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, தீரஜ் தனது நண்பருக்கு வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதில், குடும்ப சூழ்நிலை தொடர்பான மன உளைச்சல் காரணமாக தனது இரண்டு மகள்களுடன் நர்மதா கால்வாயில் குதித்து தற்கொலை செய்யப் போவதாக தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து போலீசார் தேடுதல் நடத்தி, தீரஜ் மற்றும் அவரது இரண்டு மகள்களின் உடல்கள் கால்வாயில் இருந்து மீட்கப்பட்டன. உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
