சோகம்... தெரு நாய்கள் தாக்கியதில் தொழிலதிபர் பரிதாப பலி!!

 
பராக் தேசாய்

வாஹ் பக்ரி தேயிலை குழுமத்தின் நிர்வாக இயக்குனர்  பராக் தேசாய் காலாமானார்.  இவருக்கு வயது 49.  அவருக்கு விதிஷா என்ற மனைவியும், பரிஷா என்ற மகளும் உள்ளனர்.அக்டோபர்  15ம் தேதி தன்னை தாக்க வந்த தெரு நாய்களிடம் இருந்து தப்பிக்க முயற்சித்தார். அதில்  அவரது வீட்டிற்கு வெளியே விழுந்து மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது.
 கீழே விழுந்து   கிடந்த அவரை  அவரது பாதுகாவலர் மீட்டு  குடும்பத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவரது குடும்பத்தினர் உடனடியாக வந்து அவரை மீட்டு அருகிலுள்ள ஷெல்பி மருத்துவமனையில் அனுமதித்தனர்.


 

ஒரு நாள் கண்காணிப்புக்குப் பிறகு, அறுவை சிகிச்சைக்காக Zydus மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு 7 நாட்களாக வெண்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  அவரது இறுதிச் சடங்குகள் இன்று காலை 9 மணியளவில் தல்தேஜ் சுடுகாட்டில் நடைபெற்றதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரு நாய்களின் தாக்குதலும், அதனை கட்டுப்படுவதில் அரசுகள் காட்டும் அலட்சியமும் பல பகுதிகளில்   தொடர் கதையாகி வருகின்றன.   தெரு நாய்கள் தாக்கியதில் தொழிலதிபர் பராக் தேசாய் உயிரிழந்திருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும்  ஏற்படுத்தியுள்ளது.

கார்த்தி சிதம்பரம்


 இது குறித்து சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் தெருநாய்கள் பிரச்சினையை தான் தொடர்ந்து எழுப்பி வருவதாகவும்   இதனை அறிவியல் ரீதியாகவும் நெறிமுறை ரீதியாகவும் கையாள்வதற்கு உடனடியாக ஒரு தேசிய பணிக்குழுவை நியமிக்க வேண்டும் எனவும்  வலியுறுத்தியுள்ளார். 
மேலும் இதன் விபரீதம் குறித்து   தான் பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், அந்த கடிதத்தை பெற்றுக் கொண்டதாக ஒப்புகை சீட்டை அனுப்பியுள்ளனர். ஆனால்,இதுவரை  எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என   கார்த்தி சிதம்பரம்  தெரிவித்துள்ளார்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web