புஸ்ஸி ஆனந்த் மருத்துவமனையில் அனுமதி... நேரில் நலம் விசாரித்த நடிகர் விஜய் !!

 
புஸ்ஸி ஆனந்த்

விஜய் மக்கள் இயக்க மாநிலப்பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த். இவருக்கு திடீர்  உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், இதன்  காரணமாக அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.   நவம்பர் 1ம் தேதி மாலை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் 'லியோ' படத்தின் சக்ஸஸ் மீட் நடைபெற்றது.

புஸ்ஸி ஆனந்த்


இந்நிகழ்ச்சியில் முதலில் ரசிகர்கள் கலந்து கொள்வதாக இருந்த நிலையில் பின்னர் ரத்து செய்யப்பட்டது. ரசிகர் மன்ற நிர்வாகிகள் மட்டும் கலந்து கொண்டனர். இந்நிகழ்விற்கு தேவையான ஏற்பாடுகளை அருகில் உடனிருந்து நடிகர் விஜய்க்கு செய்து கொடுத்தார் புஸ்ஸி ஆனந்த்.  இதனால் ஏற்பட்ட அயற்சி மற்றும் சோர்வின் காரணமாக புஸ்ஸி ஆனந்த் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.  

புஸ்ஸி ஆனந்த்


இதுகுறித்த தகவல் அறிந்த நடிகர் விஜய்  உடனடியாக   மருத்துவமனைக்கு நேரில் சந்தித்து அவரை நலம் விசாரித்தார். அங்கிருந்த மருத்துவர்களிடம் புஸ்ஸி ஆனந்த் உடல் நலம் மற்றும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து நடிகர் விஜய் விளக்கமாக கேட்டறிந்தார்.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web