மீண்டும் அதிர்ச்சி... பிரபல ஹோட்டல் ஆனியன் ஊத்தப்பத்தில் முறுக்கு கம்பி... வைரலாகும் வீடியோ!

 
ஹோட்டல்

காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் அருகேயுள்ள டி.கே.நம்பி தெரு பகுதியில் பிரபல ஹோட்டலான ஸ்ரீ சரவண பவன் செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலுக்கு வாடிக்கையாளர் ஒருவர் தனது நண்பருடன் சாப்பிடச் சென்றுள்ளார். அங்கு அவர்கள் இருவரும், ஆனியன் ஊத்தப்ப தோசை ஆர்டர் செய்துள்ளார். 

சுடசுட ஆனியன் ஊத்தப்பம் வந்த பிறகு, அதை உண்ண முயன்ற போது அதில் சிறிய அளவிலான கம்பி ஒன்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அய்யோ.. இந்த கம்பியையும் சேர்த்து சாப்பிட்டால் நமது வயிறு என்னாவது என அதிர்ச்சி அடைந்த அவர், இது குறித்து ஹோட்டல் மேலாளரிடம் புகார் தெரிவித்தார்.

எனினும் அலட்சியத்துடன் பதில் கிடைத்ததால் ஆத்திரம் அடைந்த அவர், உணவகத்தின் கவனக் குறைபாடான விஷயத்தையும் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வாடிக்கையாளர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள அந்த வீடியோ, வைரலாகி வருகிறது.

ஹோட்டல் ஹோட்டல்

இது குறித்து உணவக மேலாளர் கூறுகையில், கம்பி எப்படி வந்தது என்று தெரியவில்லை. வாடிக்கையாளர் அமர்ந்திருந்த இடத்திலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பின்னரே என்ன நடந்தது என்பது குறித்து தெரியும் என்கிறார்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web