கர்நாடகாவில் பரபரப்பான வாக்குப்பதிவு... 58,545 வாக்கு சாவடிகள்... 84,119 போலீசார் பாதுகாப்பு பணியில்... கிருஷ்ணகிரியிலும் டாஸ்மாக் கடைகளைத் திறக்க தடை!

 
4 மாநில சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது பாஜக

கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7  மணிக்கு துவங்கி விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைப்பெற்று வருகிறது. கர்நாடக மாநிலம் முழுவதும் 58 ஆயிரத்து 545 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக 2 ஆயிரத்து 959 சிறப்பு படையினர் உட்பட 84 ஆயிரத்து 119 காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 30 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் பாதுகாப்புக்காக வெப் கேமரா பொருத்தப்பட்டு, தலைமை தேர்தல் அலுவலகத்தில் இருந்து வாக்குப்பதிவை கண்காணிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்கள் காலை முதலே ஆர்வமுடன் வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இந்நிலையில், வாக்குப்பதிவை முன்னிட்டு, கர்நாடக மாநிலம் முழுவதும் மதுபான கடைகள், பார்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் போலவே கர்நாடகாவிலும், போட்டியிடுகின்ற அரசியல் கட்சிகள், ஆட்சி அமைத்தால் பொதுமக்களுக்கு ஏராளமான இலவசங்களைத் தருவதாக வாக்குறுதிகளை அள்ளி இறைத்துள்ளன. பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், இலவச சிலிண்டர்கள், பால், ரேஷன் கடைகளில் சிறுதானியங்கள், இல்லத்தரசிகளுக்கு உதவித்தொகை என பரபரப்பான இலவசங்கள், கவர்ச்சிகரமான விளம்பரங்கள் வாக்குறுதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.  

பீர்

பாஜக விடுத்த தேர்தல் அறிக்கையில் ஏழை குடும்பங்களுக்கு இலவச சமையல் கியாஸ் சிலிண்டர்கள், இலவச பால், ரேஷன் கடைகளில் 5 கிலோ சிறுதானியங்கள் வழங்கப்படும் என அசத்தலான அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டன. இதே போல்  காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் இதைவிட கவர்ச்சிகரமான அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளன. இலவசங்கள் மக்களிடையே எடுபடுமா என்பது தேர்தல் முடிவுகளில் தெரிந்து விடும்.

தேர்தல் வாக்குப்பதிவு கல்லூரி மாணவிகள் வோட்டு

கர்நாடக தேர்தலை முன்னிட்டு தமிழகத்திலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் கர்நாடக எல்லையில் அமைந்திருப்பதால் அதனை ஒட்டியுள்ள  நாச்சிக்குப்பம், கர்னூர், கோட்டயூர், தளி, ஜவளகிரி, சொக்காபுரம், பேரிகை, முகலப்பள்ளி, பாகலூர் மற்றும் கக்கனூர் கிராமங்களில் அமைந்துள்ள 5 கிலோ மீட்டர் சுற்றளவில் 12 டாஸ்மாக் மதுபான கடைகள் இன்று மே 10ம் தேதி நள்ளிரவு வரை மூடப்படும் என அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web