சி.ஏ.ஏ திட்டம்.. முதல் முறையாக 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழ் வழங்கியது மத்திய அரசு!

 
சிஏஏ

இந்தியாவின் அண்டை நாடுகளான வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து துன்புறுத்தப்பட்டதால் இந்தியாவுக்கு வந்த முஸ்லீம் அல்லாதவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்காக குடியுரிமை திருத்தச் சட்டம் டிசம்பர் 20119 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பௌத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். ஆனால் இந்திய குடியுரிமை வழங்குவதற்கான விதிகள் 4 ஆண்டுகள் தாமதத்திற்கு பிறகு மார்ச் 11 அன்று வெளியிடப்பட்டது. இதையடுத்து, குடியுரிமைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலித்த அரசு, குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் முதல் குடியுரிமைச் சான்றிதழ்களை இன்று வழங்கியது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா விண்ணப்பித்த 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழை வழங்கினார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் டிசம்பர் 31, 2014க்கு முன் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு குடிபெயர்ந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க அனுமதிக்கிறது. உரிய ஆவணங்கள் இல்லாவிட்டாலும், குறைந்தது 5 ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்த பிறகு அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web