மத்திய அமைச்சரவை ஒப்புதல்... பரமக்குடி - ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை...!

 
பரமக்குடி - ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை


 
மதுரையில் இருந்து பரமக்குடி வரையில் 4 வழி தேசிய நெடுஞ்சாலையை ராமநாதபுரம் வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தலைநகர் டெல்லியில்  பிரதமர்  மோடி தலைமையில் செவ்வாய்க்கிழமை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்தை தொடர்ந்து, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள திட்டங்கள் குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.  

பரமக்குடி - ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை
"இந்த கூட்டத்தில் ரூ. 1.07 லட்சம் கோடி மதிப்பிலான வேலைவாய்ப்பு ஊக்கத் திட்டம், ரூ. 1 லட்சம் கோடியில் ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் புதுமைதிட்டம், தேசிய விளையாட்டுக் கொள்கை 2025 மற்றும் பரமக்குடி - ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை இவைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பரமக்குடி - ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை

மதுரை - ராமேஸ்வரம் - தனுஷ்கோடி முனையம் ஆகிய புனித தலங்களை இணைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை கட்டப்பட்டுள்ளது. மதுரை - பரமக்குடி வரையில் ஏற்கனவே 4 வழி தேசிய நெடுஞ்சாலை கட்டப்பட்டுள்ளது.  மொத்தம் 46.7 கிலோ மீட்டர் தொலைவிலான சாலையைக் கட்டமைக்க ரூ. 1,853 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?