சிசேரியன் பிரசவங்கள் அதிகரிப்பு.. பெண்களின் வேலையின்மையே காரணம்.. அமைச்சர் மா.சு பேச்சு!

தமிழக சுகாதாரம் மற்றும் மருத்துவ நலத்துறை அமைச்சர் திரு. மா.சுப்ரமணியன் அறுவை சிகிச்சை மூலம் பெண்களின் பிரசவம் அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, சமீபகாலமாக அறுவை சிகிச்சை மூலம் பெண்களுக்கு குழந்தை பிறப்பது அதிகரித்து வருகிறது. நார்மல் டெலிவரி குறைந்து வருகின்றன.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் அதிகளவில் வேலை செய்து வந்தனர். அதனால்தான் அவர்களுக்கு சுகப்பிரசவம் நடந்தது. ஆனால் தற்போது பெண்களின் பணிச்சுமை குறைந்துள்ளது. இதனால்தான் சிசேரியன் பிரசவங்கள் அதிகரித்துள்ளன. தமிழகம் முழுவதும் பாதுகாப்பான பிறப்புகளை அதிகரிக்க வேண்டும். இந்தியாவிலேயே தமிழகத்தில் சிறந்த மகப்பேறு மருத்துவர்கள் உள்ளனர் என்றும் அவர் கூறினார்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!