பதற வைக்கும் வீடியோ... ‘காருக்கடியில என் குழந்தை...' ஆவேசமாக காரை சூழ்ந்துக்கொண்டு வழிமறித்த மாடுகள்!
நாட்டில் பரபரப்பான சாலையில் அதிக விபத்துக்கள் நடைபெறுவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதில் விலங்கினங்களும் அடங்கும். அந்த வகையில் தற்போது அதிர்ச்சி கிளப்பும் விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ராய்கரில், சாலையில் சென்ற கன்றுக்குட்டி மீது கார் மோதியது. அதிவேகமாக கார் தாக்கியதில் கார் 200 மீட்டர் தூரம் கன்றுக்குட்டியை இழுத்து சென்றது. உடனே மாடுகள் வாகனத்தை சூழ்ந்து கொண்டன.
ये वीडियो छत्तीसगढ़ के रायगढ़ का है।
— Jitender Sharma (@capt_ivane) December 22, 2024
गाड़ी के नीचे गाय का बछड़ा आ गया तो गाय दौड़कर आयी और गाड़ी के आगे खड़ी हो गयी ताकी गाड़ी भाग ना सके।
लोगों ने बछड़े को निकाला और उसके बाद अब उसका इलाज चल रहा है। pic.twitter.com/PAWBKCwQKi
கார் நின்றதும் மாடுகள் காரை சூழ்ந்து கொண்டன. உடனே அப்பகுதி மக்கள் விரைந்து வந்து காரை தூக்கி அதன் அடியில் சிக்கியிருந்த கன்றுக்குட்டியை மீட்டனர். கன்றுக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!