கலிபோர்னியா காட்டுத்தீ.. உயிர் பிழைக்க தப்பியோடும் குட்டி மான்.. வீடியோ வைரல்!

 
குட்டி மான்

அமெரிக்காவின் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் ஹாலிவுட் இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் உட்பட பல பிரபலங்கள் வசிக்கின்றனர். சமீபத்தில் அங்கு ஒரு பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான ஏக்கர் காடுகள் எரிந்து நாசமாகின. காட்டுத்தீ கட்டுப்பாடில்லாமல் பரவியதால், அந்தப் பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது.


இந்நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயில் இருந்து தப்பிக்கும் குட்டி மான் பற்றிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பயனர்களின் இதயங்களை உடைத்து வருகிறது. அதில், அல்டடேனா வழியாக ஒரு குட்டி மான் ஓடும் காட்சிகள் உள்ளன. இந்த வீடியோ X தளத்தில் 3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ள நிலையில், பல பயனர்கள் தீயில் சிக்கிய காட்டு விலங்குகள் குறித்து ஆழ்ந்த கவலையை தெரிவித்துள்ளனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web