அமலுக்கு வந்தது... இன்று முதல் அமெரிக்காவுக்கு தபால் சேவை நிறுத்தம்!

 
அஞ்சலகம்

இன்று ஆகஸ்ட் 25ம் தேதி முதல் அமெரிக்காவுக்கு வழங்கும் அஞ்சல் சேவைகளை முழுமையாக நிறுத்தி வைப்பதாக இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ள நிலையில், விடுமுறை தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை முதலே இந்த உத்தரவு அமலுக்கு வந்தது. 

ரஷ்யா உக்ரைன் போருக்கு இந்தியா மறைமுகமாக உதவி செய்வதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டியுள்ளார். இதனையடுத்து அமெரிக்கா இந்தியா மீது  50% என்ற கடுமையான வரி விதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதற்கு ரஷ்யா, கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தியா அமெரிக்கா

உக்ரைனுடனான போர் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ரஷியாவை வரவழைக்கவே இந்தியா மீது வரி விதித்ததாக அமெரிக்கா பகிரங்கமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக இந்தியா அமெரிக்காவுக்கு வழங்கும் அஞ்சல் சேவையை நிறுத்தி வைப்பதாக நேற்று ஆகஸ்ட் 23ம் தேதி அறிவித்துள்ளது.

ஜூலை 30ம் தேதி அமெரிக்காவால் அறிவிக்கப்பட்ட கடுமையான வரி விதிப்பைத் தொடர்ந்து இன்று ஆகஸ்ட் 25 தேதி முதல் அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இந்தியா அறிவித்துள்ளது. 800 அமெரிக்க டாலர் வரை மதிப்புள்ள பொருள்களுக்கு இதுவரை வரி விலக்கு அளிக்கப்பட்ட நிலையில் இனி அது ரத்து செய்யப்படுகிறது. 

ட்ரம்ப் மோடி

அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் அனைத்து சர்வதேச அஞ்சல் பொருள்களும் அவற்றின் மதிப்பைப் பொருட்படுத்தாமல் சர்வதேச அவசர பொருளாதார ஆற்றல் சட்டத்தின் (IEEPA)படி சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும். எனினும் 100 அமெரிக்க டாலர் வரையுள்ள பரிசுப்பொருள்களுக்கு மட்டும் வரிவிலக்கு அளிக்கப்படும் என அறிவித்துள்ளது.

மற்ற பொருள்களுக்கு வரியை வசூலித்த பிறகே அஞ்சல் அனுப்ப வேண்டும். இன்று ஆகஸ்ட் 25 ம் தேதி திங்கட்கிழமை முதல் அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் அனைத்து வகையான அஞ்சல் பொருட்களின் முன்பதிவுகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்திருப்பதாக தபால்துறை அறிவித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?