யானை தாக்கி பிரபல செய்திச்சேனல் கேமராமேன் பலி!

 
முகேஷ்

 கேரளாவில்  செயல்பட்டு வரும் பிரபல செய்தி சேனலில் கேமராமேனாக பணிபுரிந்து வருபவர் முகேஷ் . 34 வயதான இவர் இன்று காலை பாலக்காடு மாவட்டம் கோட்டிகட் பகுதியில் உள்ள வனப்பகுதியில் யானைகளை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்.  அப்பகுதியில் உள்ள ஆற்றின் அருகே யானைகள் நடந்து சென்றுகொண்டிருந்தன. அப்போது  முகேஷ் அதை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்.

திடீரென ஆக்ரோஷம் அடைந்த காட்டு யானை முகேஷ் மீது  சரமாரியாக தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் முகேஷ் படுகாயம் அடைந்தார்.

முகேஷ்

அவரை மீட்ட சக ஊழியர்கள், அக்கம் பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும்  முகேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web