நாளையுடன் பிரச்சாரம் ஓய்வு... ஜூலை 10 இடைத்தேர்தல்!

 
விக்கிரவாண்டி

தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்  ஜூலை 10ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில்  திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாஜக சார்பில்  பாமக வேட்பாளர் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயா உட்பட  29 பேர் போட்டியிடுகின்றனர்.

விக்கிரவாண்டி


இந்த தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் நாளை ஜூலை 8ம் தேதியுடன் நிறைவு  பெற உள்ளது. இதனைத் தொடர்ந்து நேரடியாகவோ ஆன்லைன் மூலமாகவோ  தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் ஜூலை 10ம் தேதி நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை 13ம் தேதி நடைபெறவுள்ளது.  இந்த இடைதேர்தலில் போட்டியிட 64 வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உட்பட 29 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு, 35 வேட்புமனுக்கல் தள்ளுபடி செய்யப்பட்டது. 

தேவர்குளம் தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க வேண்டும் – தொல்.திருமாவளவன்
 
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 29 வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதியாகியுள்ள நிலையில், திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் பரப்புரையை தீவிரமாக மேற்கொண்டுவருகின்றனர். இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் ஜூலை 8,9,10 மற்றும் ஜூலை 13 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார். இந்த நாட்களில் அனைத்து டாஸ்மாக் கடைகள், தனியார் மதுபானக் கூடங்கள், சொகுசு ஹோட்டல்களிலும் மதுபான சப்ளை உள்ளிட்ட எதுவும் இருக்க கூடாது எனவும், மீறினால் கடும் நடவடிக்கை எடுப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web