12,500 கிராமங்களில் தவெகவின் கொள்கை விளக்கும் பிரச்சார கூட்டங்கள்... தவெக தலைவர் விஜய்!

 
விஜய்


தமிழக வெற்றிக் கழகத்தின்  மாநில செயற்குழு கூட்டம் இன்று ஜூலை 4 ம் தேதி  சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற  இந்தக் கூட்டத்தில் 300க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படன.

தவெக

இந்த செயற்குழு கூட்டத்தில் 120 மாவட்டங்கள் மற்றும் 12,500 கிராமங்களில் தவெகவின் கொள்கைகளை விளக்கும் பிரச்சாரங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விஜய் சுற்றுப்பயணத்திற்கு முன், மாநில மாநாட்டை நடத்த வேண்டும் என தவெக செயற்குழு கூட்டத்தில் விஜய் பேசியதாக கூறப்படுகிறது.  வீட்டிற்கு ஒருவரை தவெகவில் சேர்க்க வேண்டும், ஒவ்வொரு தெருவிலும் 10 பேர் வரை தவெக நிர்வாகியாக இருக்க வேண்டும் என விஜய் அறிவுறுத்தியுள்ளார்.

தவெக
மேடையில் பேசிய தவெக தலைவர் விஜய், ” தந்தை பெரியாரை அவமதித்தோ, அறிஞர் அண்ணாவை அவதூறுக்கு உள்ளாக்கியோ அல்லது தமிழ்நாட்டின் மதிப்பிற்குரிய தலைவர்களை வைத்தோ அரசியல் செய்ய நினைத்தால், அதில் பாஜக ஒருபோதும் வெற்ற பெற இயலாது. சுயநல அரசியல் லாபங்களுக்காக பாஜகவுடன் கூடி குழைந்து கூட்டணிக்கு போக நாம் திமுக, அதிமுகவோ இல்லை, நாம் தமிழக வெற்றிக் கழகம்” எனக் கூறியுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?