ஹோட்டல், பெட்ரோல் பங்க்குகளில் 2 ஆயிரம் நோட்டை மாற்ற முடியுமா?

 
ரூபாய் நோட்டு பணம் டாலர்

ரூபாய் 2 ஆயிரம் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து செப்டம்பர் 30ம்தேதி வரை மாற்றிக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, நேற்றுமுதல் 2 ஆயிரம் நோட்டுகளை வங்கிகளில் மாற்றும் பணி தொடங்கியது. அதேநேரம் ஹோட்டல், மளிகைக் கடை, பெட்ரோல் பங்க்குகளில் சிலர் பொருட்களை வாங்கி 2 ஆயிரம் ரூபாய் நோட்டை மாற்றி வருகின்றனர். இருப்பினும் சில இடங்களில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் வாங்கப்படமாட்டாது என்ற அறிவிப்பு பலகை கண்ணில் தெரிகிறது.

பெட்ரோல்

ஏன் இதுகுறித்து சென்னை ஹோட்டல்கள் சங்க தலைவர் ராஜ்குமார் கூறியதாவது... ஒரு நாளைக்கு 10 நோட்டுக்கு மேல் மாற்ற முடியாது. இருந்தாலும் வாங்கச் சொல்லியுள்ளோம். குறிப்பிட்ட அளவுக்கு மேல் வாங்க முடியாது ஒருவர் ரூபாய் 3 ஆயிரத்துக்கு டீசல் போடுவதற்கு 2 ஆயிரம் ரூபாய்தாளும், 500 ரூபாய் தாள்களும் கொடுத்தால் வாங்க மாட்டோம் என்று சொல்வதில்லை. 100 ரூபாய் பெட்ரோலுக்கு 2 ஆயிரம் நோட்டு கொடுத்தால் எப்படி ? கடந்த முறை பணமதிப்பிழப்பின் பொழுது, வருமான வரித்துறையால் பல்வேறு பிரச்னைகளை சந்தித்தோம். இப்போது அது போன்ற பிரச்னை வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கி றோம். இப்போதைய சூழ்நிலையில், மக்கள் சில்லறையுடன் வந்தால் எந்த பிரச்னையும் இல்லை என்றார்.

இதேபோல சில ஹோட்டல்களிலும் இப்படிப்பட்ட அறிவிப்புக்கள் காணப்படுகின்றன இது குறித்து கேட்கையில் பெயரை வெளியிட வேண்டாமே எனக்கேட்டுக்கொண்டவர் நாங்கள் கணக்கு காட்டும் போது சிக்கல் வரும் அதனால் மக்களே சில்லறையாக மாற்றிக் கொண்டு வந்தால் நல்லது. ஹோட்டல்களில் எப்போதும் சில்லறையுடன் இருக்க முடியாது பெரிய ஓட்டல்களில் வாங்குவார்கள். சிறிய ஓட்டல் களில் வாங்க மாட்டார்கள். அவர்களிடம் வாங்குங்கள் என்றும் வாங்க வேண்டாம். என்றும் நாங்கள் சொல்ல வில்லை, இருந்தாலும், பெரும்பாலான ஹோட்டல்களில் வாங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்றார்.

2000

பெரும்பாலான பெட்ரோல் பங்குகள், ஹோட்டல்கள் ஆகியவை முக்கிய பிரமுகர்களுக்குத்தானே சொந்தமானதாக இருக்கிறது ஆகவே நம்மிடம் இருக்கும் சொற்ப இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை நேரடியாக செலுத்தி பெற்றுக்கொள்வதால் அரசுக்கு உதவி செய்வதாக அமையும் ஆகவே தவிர்க்க முயலுங்கள் பொதுமக்களே சரியான சில்லறையுடனே செல்லுங்கள் அல்லது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை பயன்படுத்துவோம்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web