அக்னி நட்சத்திரத்தில் வீட்டில் சுபகாரியங்களை தொடங்கலாமா? ஜோதிடம் என்ன சொல்லுது?
தமிழகத்தின் பல பகுதிகளில் ஏற்கனவே வெயில் கொளுத்தி வருகிறது. இன்று முதல் அக்னி நட்சத்திரம். கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியோர்கள், இணைநோய் இருப்பவர்கள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலில் அலைய வேண்டாம். வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அக்னி நட்சத்திர காலகட்டத்தில் வீடுகளில் சுபகாரியங்களை செய்வது நல்லதா என்ற கேள்வி பலருள் எழுந்துள்ளது. இதற்கு முந்தைய தலைமுறை காலகட்டத்தில் அக்னி நட்சத்திர நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததாலும், அப்போது குளிர்சாதனம், மின்விசிறி போன்ற வசதிகள் கண்டறியப்படவில்லை.

இதனால் அந்த நேரத்தில் சுபகாரியங்களை நடத்தினால், வருவோருக்கு அசௌகரியமாக இருக்கும் என்பதால் சுபகாரியங்களை தவிர்த்து விட்டனர்.
சூரியனின் ஒளி அதிஉச்ச காலமான அக்னி நட்சத்திரத்தில் சில சுபகாரியங்களை செய்ய வேண்டாம் என்கிறது நமது ஜோதிட சாஸ்திரம்.

அக்னி நட்சத்திரத்தில் தவிர்க்க வேண்டியவை: வீடு கட்ட ஆரம்பிப்பது மற்றும் அதற்கான கிணறு வெட்டுதல், பூமி பூஜை செய்வது, விவசாய விதைப்பு வேலைகள், மரம் வெட்டுதல், குழந்தைகளுக்கு காது குத்தி மொட்டையடித்தல், கிரகப்பிரவேசம், பந்தல்கால் நடுவது, தெய்வத் திருவுருவங்களைப் பிரதிஷ்டை செய்வது போன்றவைகளைத் தவிர்க்கலாம் என்கிறது ஜோதிடம். அதே போல் திருமணம், நிச்சயதார்த்தம், சீமந்தம், பெண் பார்த்தல், கட்டிய வீட்டில் குடிபுகுதல், வாடகை வீடு மாறுதல், உபநயனம் ஆகியவை செய்வதில் எந்த தவறும் இல்லை என்கிறது. சுப விசேஷங்களுக்கு பேச்சுவார்த்தைகளோ அதற்கான ஏற்பாடுகளோ செய்வதில் தவறில்லை.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
