72 பட்டாசு ஆலை உரிமங்கள் ரத்து... மாவட்ட கலெக்டர் திடீர் உத்தரவு!

 
பட்டாசு

 குட்டி ஜப்பான் என அழைகக்ப்படும் பட்டாசு தயாரிப்புக்கு பெயர் போன சிவகாசியில் அனுமதியின்றி பல பட்டாசு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் அடிக்கடி விபத்துக்களும், அசம்பாவிதங்களும் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில்  1,098 பட்டாசு ஆலைகள் உரிமம் பெற்று   இயங்கி வருகின்றன. பட்டாசு ஆலைகளில் தொடர்ந்து ஏற்படும் வெடி விபத்துகளைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி ஆலைகளில் கூடுதல் ஊழியர்களை பணியமர்த்துவது, பயிற்சி இல்லாத நபர்களை பணிக்கு அமர்த்துவது, அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் வெடி பொருள்களை கையாள்வது, பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பட்டாசு தயாரிப்பது, தடை செய்யப்பட்ட பேரியம் உள்ளிட்ட மருந்துகளை பயன்படுத்துவது, பட்டாசு ஆலையை சட்ட விரோதமாக உள் குத்தகைக்கு விடுவது, குடோன்களில் அளவுக்கு அதிகமாக பட்டாசுகளை இருப்பு வைப்பது, வீடுகள், காட்டுப் பகுதிகளில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பது என பலப்பல  காரணங்களால் பட்டாசு ஆலைகளில் விபத்துகள் ஏற்படுகின்றன.

ராஜ்கோட் தீ விபத்து
இதுபோன்று விதிமுறைகளை மீறும் பட்டாசு ஆலைகளை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார் .இந்த உத்தரவின்பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் தலைமையில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில் திடீர் ஆய்வுகள் மேற்கொண்டு  வருகின்றன. அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 6 பட்டாசு ஆலைகளில் விதிமுறை மீறல்கள் கண்டறியப்பட்டு ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுவரை பட்டாசு ஆலைகளில் வருவாய்த் துறையினரால் நடத்தப்பட்ட ஆய்வில், நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையின் அனுமதி பெற்று இயங்கிய 33 ஆலைகள், மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்று இயங்கிய 39 ஆலைகள் என மொத்தம் 72 பட்டாசு ஆலைகளின் உரிமங்கள் இதுவரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.மேலும், விதிமுறைகளை மீறும் பட்டாசு ஆலைகள் மீதான ஆய்வு நடவடிக்கைகள் தொடரும்.  பட்டாசு ஆலைகளில் விதிமுறை மீறல்கள் கண்டறியப்பட்டால் ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு சீல் வைக்கப்படும் நடவடிக்கை தொடரும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!