அரசு பேருந்துகளில் கட்டணம் ரத்து.. அரசாணை வெளியீடு!

 
பேருந்து பெண் குழந்தை

தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட குழதைகளுக்கு அரசு பேருந்துகளில் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்து தமிழக அரசு புதிதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.

தமிழகத்தில் பெண்களுக்கு அரசு பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் இல்லாமல், இலவசமாக பயணிக்கலாம் என்று திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு, ஆட்சிக்கு வந்த பின்னர் உத்தரவிட்டிருந்தது. இதற்கு பெண்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது. நிறைய வேலைக்குப் போகும் பெண்கள் இத்திட்டத்தினால், பெரிதும் பயனடைகின்றனர். இந்நிலையில், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு முழுமையாக டிக்கெட் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது நாள் வரை மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, கட்டணம் வசூலிக்கப்படாமல் இருந்து வந்தது. 3 வயது முதல் 12 வயது வரையானவர்களுக்கு பாதி கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. 

அரசு பேருந்து

இந்நிலையில், சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், கடந்தாண்டு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு அரசு பேருந்துகளில் இனி கட்டணம் இல்லை என்று அறிவித்திருந்தார். இன்று, இதனைச் செயல்படுத்தும் விதமாக, இதற்கான உத்தரவு தமிழ்நாடு அரசு அரசிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

பேருந்து

அதில், தமிழ்நாட்டில் அரசு பேருந்துகளில் 5 வயது வரை கட்டணம் ரத்து செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஐந்து வயது முதல் 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமியர்களிடம் பாதி கட்டணம் வசூலிக்க அனுமதிக்கப்படுவதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web