கஞ்சா விற்பனை விவகாரம்.. இரு இளைஞர்கள் கொடூர கொலை.. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!

 
குண்டமேடு சுடுகாடு

வண்டலூரை அடுத்த ஓட்டேரி காவல் நிலையத்தில் நேற்று நள்ளிரவு, ஹரி என்ற ஆட்டோ டிரைவர் நேரடியாக காவல் நிலையத்துக்கு வந்து புகார் அளித்தார். நள்ளிரவில் இரண்டு வாலிபர்களை ஆட்டோவில் ஏற்றிச் சென்றதாகவும், இரண்டு வாலிபர்களும் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டதாகவும் காவல்நிலையத்தில் வாக்குமூலம் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில் ஆட்டோ டிரைவர் ஜில்லா என்ற ஹரி அண்ணாமலை, தமிழரசன் ஆகியோரை தாம்பரம் அருகே உள்ள பெருங்களத்தூர், குண்டமேடு சுடுகாடு, உரகிடங்குக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது அங்கு சில வாலிபர்கள் இருந்ததாகவும், அங்கிருந்த வாலிபர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் திடீரென அங்கிருந்து சிலர் தமிழரசன், ஜில்லா என்ற அண்ணாமலை ஆகிய இருவரையும் கொன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆட்டோ டிரைவர் ஹரி கொடுத்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் கஞ்சா விற்பனை தொடர்பாக ஏற்பட்ட மோதல் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கொலையில் கோபாலகிருஷ்ணன் என்ற  கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். சென்னை புறநகரில் கஞ்சா விற்பனை தொடர்பாக ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைக்கு கஞ்சா விற்பனை காரணமாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதால், சென்னை புறநகர் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து போலீஸாரை தொடர்பு கொண்டு விசாரித்தபோது: முதலில் சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். ஆட்டோ டிரைவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். முதற்கட்ட விசாரணையில் ஒருவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். கொலை நடந்த பகுதியில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web