பல ஆண்டுகளாக கஞ்சா விற்பனை அமோகம்.. கையும் களவுமாக சிக்கிய வடமாநில தம்பதி!

 
 ஷியாம் ஹான்ஸ் - பரிமா ஹான்ஸ்

சென்னை குரோம்பேட்டை அடுத்த நாகல்கேணி பகுதியில் உள்ள மீன் மார்க்கெட் அருகே சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக சங்கர் நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ரகசிய தகவலின் பேரில், அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த வடமாநில தம்பதியை பிடித்து சோதனை நடத்தினர்.

கஞ்சா கடத்தல்

இதையடுத்து, காவல் நிலைய போலீஸார் நடத்திய விசாரணையில், ஒடிசாவைச் சேர்ந்த ஷியாம் ஹான்ஸ் (33), பரிமா ஹான்ஸ் (30) ஆகியோர், திருப்போரூரில் பணிபுரிந்த போது, ​​ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி, பல்லாவரம், தாம்பரம், சங்கர்நகர் ஆகிய இடங்களில் விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டனர். பின்னர் அவர்களை கைது செய்து போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும், விசாரணையில் தம்பதியினர் பல ஆண்டுகளாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் காவல்துறைக்கு கஞ்சா எங்கிருந்து கிடைத்தது மற்றும் கஞ்சாவை முக்கிய சப்ளை செய்தவர் யார்? வேறு யார் யாருடன் தொடர்புடையவர்கள் என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web