கஞ்சா விற்பனை.. பெண் உட்பட 4பேரை அதிரடியாக கைது செய்த போலீசார்!

 
மாயி

தேனி மாவட்டம், கம்பம் அருகே கூடலூர் 18 கால்வாய் கரையில் சிலர் கஞ்சா பதுக்கி விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கூடலூர் மேற்கு காவல் நிலைய போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 18ம் கால்வாய் கரையில் உள்ள மூன்றாவது பாலம் அருகே பெண் உள்பட 4 பேர் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்தனர்.

கஞ்சா கடத்தல்

அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னும் பின்னுமாக பதிலளித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களிடம் தீவிர சோதனை நடத்தினர். அதன்பிறகு ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் மதிப்புள்ள சுமார் 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் கம்பம் கோம்பை வீதியைச் சேர்ந்த மாயி (46), கம்பம் மந்தையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த விஸ்வநாதன் (22), கம்பம் கோம்பை சாலையைச் சேர்ந்த சின்னசாமி (62), கூடலூர் எல்லைத் தெருவைச் சேர்ந்த அமுதா (48) என்பது தெரிந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web