திடீரென தீப்பிடித்து எரிந்த கார் ... கோவில்பட்டியில் பரபரப்பு!

 
திடீரென தீப்பிடித்து எரிந்த கார் ... கோவில்பட்டியில் பரபரப்பு!

தூத்துக்குடி  மாவட்டம், கோவில்பட்டி அருகே ஒர்க்‌ஷாப்பில் நின்ற கார் மீது தீப்பிடித்ததால் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பழனியாண்டவர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் குமார். இவர் சாத்தூர் மெயின் ரோட்டில் நான்கு சக்கர வாகனம் பழுது பார்க்கும் ஒர்க்‌ஷாப் நடத்தி வருகிறார். இந்த ஒர்க்‌ஷாப் அருகே உள்ள காலி இடத்தில் புற்கள் அடர்ந்து வளர்ந்திருந்தன. அந்த புற்கள் மீது நேற்று சிலர் தீ வைத்துள்ளனர். இதனால் புற்கள் முழுவதும் தீ மளமளவென பற்றி எரிந்து சுற்றிலும் பரவியது.

போலீசார் கலவரம் காவல்துறை மறியல் போராட்டம்

அப்போது இந்த ஒர்க்‌ஷாப்பில் பழுது பார்ப்பதற்காக நிறுத்தப்பட்டிருந்த காரில் தீப்பற்றியது. இதில் கார் முழுவதும் தீயில் கருகி முழுவதும் சேதமடைந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை காணப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோவில்பட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார் அரைமணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

போலீஸ்

இதுகுறித்து தகவலறிந்ததும் கோவில்பட்டி கிழக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இதில், எரிந்து சேதமடைந்த கார் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பழுது பார்ப்பதற்காக குமாரின் ஒர்க்‌ஷாப்புக்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது என தெரியவந்தது. கார் தீப்பற்றி எரிந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?