கார் வெடிப்பு தற்கொலைத் தாக்குதல்... உயிரிழந்தோர் எண்ணிக்கை 13ஆக உயர்வு!

 
டெல்லி
 

தில்லி செங்கோட்டை அருகே திங்கள்கிழமை மாலை நடந்த கார் வெடிகுண்டு தற்கொலைத் தாக்குதல் நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த தாக்குதலில் முதலில் 12 பேர் உயிரிழந்திருந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த பிலால் என்ற இளைஞர் வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது.

வெடிவிபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் லோக் நாயக் ஜெய பிரகாஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்தபடி, பிலாலின் உடல் உடற்கூராய்வு முடிந்ததும் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் குறித்து மத்திய அரசு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக இது பயங்கரவாதிகளின் தற்கொலைத் தாக்குதல் என அறிவித்தது. கார் ஓட்டி தாக்குதல் நடத்தியது டாக்டர் உமர் என தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது. அவரது தாயின் டிஎன்ஏ பரிசோதனையின் மூலம் இது உறுதி செய்யப்பட்டதாகவும், சம்பவம் தொடர்பான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!