ரூ.1.7 கோடி மதிப்புள்ள கார் சுக்குநூறாய் நொறுங்கியது... யூ-ட்யூப் நேரலையில் விபரீதம்!
யூ-ட்யூப் நேரலையின் போது ரூ.1.7 கோடி மதிப்புள்ள ஸ்போர்ட்ஸ் கார் விபத்துக்குள்ளான வீடியோ வைரலாக பரவி வருகிறது.
யூ-ட்யூப்பில் லைவ் ஸ்ட்ரீம் செய்துக் கொண்டிருந்த போது கவனக்குறைவாக வாகனம் ஓட்டிய யூடியூபர் ஒருவர் ரூ.1.7 கோடி மதிப்புள்ள தனது ஸ்போர்ட்ஸ் காரை விபத்து ஏற்படுத்தி சுக்குநூறாய் உடைந்தார்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஜேக் டோஹெர்டி என்ற 20 வயதுடைய யூடியூபர், கவனக்குறைவாக கார் ஓட்டிச் சென்று விபத்தில் சிக்கினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, யூடியூபருக்கு எதிராக பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.
Jack Doherty just crashed his brand new McLaren on stream 😳 https://t.co/WNnKGbmHbD
— FearBuck (@FearedBuck) October 5, 2024
துணிச்சலான ஸ்டண்ட்களுக்கு பெயர் பெற்ற டோஹெர்டி, கடந்த அக்டோபர் 5ம் தேதி மழையில் நனைந்த சாலையில் காரை ஓட்டிச் சென்றுள்ளார். வாகனம் ஓட்டும்போது தான் லைவ் ஸ்ட்ரீம் செய்துக் கொண்டிருந்த செல்போனை கவனித்ததால் விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
சாலையில் இருந்த கைப்பிடி சுவற்றில் மோதி வாகனம் முற்றிலும் சேதமடைந்து சுக்குநூறாய் நொறுங்கியது. அவருடன் இருந்த நபரின் மூக்கு மற்றும் வாயில் இருந்து ரத்தம் வருவது வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த விபத்தின் காணொளி யூ-ட்யூப் நேரலையில் ஒளிபரப்பப்பட்டு பலர் பார்த்துள்ளனர்.

வாகனத்தில் சிக்கிய இருவரும் வெளியே வருவதை வீடியோக் காட்சிகளில் காணலாம். இதில் காரின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது. காருக்குள் ஏர்பேக் முழுமையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. விபத்து நடந்ததும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
இந்த வீடியோ வைரலானதையடுத்து பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அவர் ஒரு பொறுப்பற்ற அணுகுமுறையைக் கொண்டிருப்பதாக பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர். அவரது சகோதரர் மூக்கில் ரத்தம் வழிய நிர்க்கதியாக நின்று கொண்டிருந்த போது அவர் வீடியோ பதிவு செய்துக் கொண்டிருந்ததாக சிலர் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!
