முருக பக்தர்கள் மாநாட்டில் பேசியவர்கள் மீது வழக்குப்பதிவு...இந்து முன்னணி கண்டனம்!

 
இந்து முன்னணி கண்டனம்

மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் மற்றும் பாஜக முன்னாள் தலைவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதற்கு இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "கடந்த ஜூன் 22 ஆம் தேதி மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு வெகு விமர்சையாக நடைபெற்றது. பல லட்சக்கணக்கான முருக பக்தர்கள் பங்கேற்ற இந்த மாநாடு தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை, இந்து ஒற்றுமையை ஏற்படுத்தி உள்ளது.

முருகன் மாநாடு

ஆரம்பத்தில் இருந்தே இந்த மாநாட்டிற்கு இடையூறு செய்யும் வகையில் ஆளும் திமுக அரசு மாநாட்டிற்கு அனுமதி அளிக்க மறுத்தது. பின்னர் நீதிமன்றம் மூலம் அனுமதி பெற்ற நிலையில் மேலும் இடையூறு செய்யும் வகையில் வாகனங்களுக்கு இ-பாஸ் பெற வேண்டும் என தமிழக அரசு நெருக்கடி கொடுத்தது. அந்தத் தடையும் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் உடைத்தெறியப்பட்டு இந்து மக்களின் பேராதரவுடன் மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது.

இதனை பொறுத்துக் கொள்ள முடியாத தமிழக அரசு காவல்துறையை ஏவி மாநாட்டில் தலைமையேற்றுப் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், மாநாட்டில் உரையாற்றிய பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை மாநாடு மற்றும் ஏற்பாடு செய்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. இது திமுக அரசின் அதிகார துஷ்பிரயோக போக்கை காட்டுகிறது.

திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி, இந்து மக்கள் பக்தியோடு நெற்றியில் இடும் சின்னங்களை தரக்குறைவாகப் பேசிய நிலையில் உயர் நீதிமன்றமே அவர் மீது வழக்கு பதிவு செய்ய அறிவுறுத்தியும் இன்றுவரை வழக்கு பதிவு செய்ய துப்பில்லாதது தமிழக காவல்துறை.

திருச்செந்தூர் முருகன் முருகர்

ஆ.ராசா உள்ளிட்ட பல திமுக தலைவர்கள் இந்து மதத்தையும், இந்துக்கள் வழிபாட்டையும், இந்துப் பெண்களையும் அவதூறாக,கேவலமாக பேசிய நிலையில் மீதெல்லாம் வழக்கு பதிவு செய்ய திராணியில்லாத காவல்துறை ஆன்மீக மாநாட்டில் இந்து ஒற்றுமைக்காகப் பேசிய தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது ஒரு தலைப்பட்சமானது.

முருக பக்தர்களின் மாநாட்டின் வெற்றியை பொறுத்துக் கொள்ள முடியாத தமிழக அரசு நடு நடுங்கிப் போய் இதுபோன்று சிறுபிள்ளைத்தனமான செயல்களில் ஈடுபடுவதை பார்த்துக்கொண்டிருக்கும் இந்து மக்கள் திமுகவிற்கு உரிய நேரத்தில் பாடம் புகட்டுவார்கள். இந்து முன்னணி ஆயிரமாயிரம் வழக்குகளையும், கைதுகளையும் சந்தித்து வளர்ந்த மக்கள் இயக்கம்.

தமிழக அரசின் இது போன்ற அதிகார மிரட்டல்களுக்கு எல்லாம் இந்து மக்கள் ஒரு துளியும் அஞ்சப் போவதில்லை. காலம் விரைவில் மாறும். திமுகவும், காவல்துறையும் அப்போது இந்த அடக்குமுறைக்கு எல்லாம் பதில் சொல்லும் நிலை உருவாகும். திமுக அரசின் சர்வாதிகாரப் போக்கை இந்து முன்னணி சட்டப்படி எதிர்கொள்ளும். பொய் வழக்கு பதிவு செய்து இந்து இயக்கத் தலைவர்களின் கருத்து சுதந்திரத்தை மிரட்டிப் பறிக்க நினைக்கும் தமிழக அரசின் ஆணவப் போக்கை இந்துமுன்னணி வன்மையாக கண்டிக்கிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?