பிரச்சாரமே செய்யல.... அண்ணாமலை காவல்துறை அதிகாரிகளிடம் காரசார வாக்குவாதம்!

 
அண்ணாமலை

 மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் கோவை பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை நேற்று இரவு வழக்கம் போல் தனது பிரச்சார வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார்.  10 மணிக்கு பிறகு  பேசுவதை நிறுத்திவிட்டு தொடர்ந்து பிரச்சார வாகனத்திலேயே நின்றுகொண்டு இருந்தார்.  அவரை காவல் துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்திய நிலையில், இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி கிடையாது எனத் தெரிவித்துள்ளனர்.  

அண்ணாமலை


இதனால் வேட்பாளர் அண்ணாமலைக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, நான் 10 மணியானதும்  மைக்கை ஆஃப் செய்துவிட்டு என்னை பார்ப்பதற்காக நின்று கொண்டிருக்கும் தொண்டர்களிடம் பேசிக்கொண்டு இருந்தேன்.  இது எப்படி பிரச்சாரமாகும்? ஒரு வேட்பாளர் 10 மணிக்கு பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு வாகனத்தில் வீட்டிற்கு செல்லும் போது டீ கடையில் டீ குடித்தால் அது பிரச்சாரமா என கேள்வி எழுப்பியுள்ளார்.   
ஒரு கட்டத்தில் நான் செல்லவேண்டிய பகுதிக்கு நடந்தே செல்கிறேன் என அண்ணாமலை நடந்தே புறப்பட்ட நிலையில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

அண்ணாமலை

இதனால் ஆவேசம் அடைந்த அண்ணாமலை சாலை மறியலில் ஈடுபட்டார். இதுகுறித்து  அண்ணாமலை மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து   அண்ணாமலை   “அற்ப காரணங்களுக்காக இன்று மீண்டும் எங்கள் பிரச்சார வாகனத்தை நிறுத்தினர்.  திமுக அரசின் அத்துமீறல்கள் எல்லை மீறியுள்ளன. இரவு 10 மணிக்குப் பிறகு பிரச்சாரம் செய்ய அனுமதி இல்லை என  போலீசார் எங்கள் வாகனத்தை நிறுத்தினர். நாங்கள் பிரச்சாரம் செய்யவில்லை.  பிரச்சார வாகனத்தில் விளக்குகள் அணைக்கப்பட்டுவிட்டன . எங்களுக்காக காத்திருந்த 2000 தொண்டர்களை சந்திக்க விரும்பினோம். காவல் துறையினரின் நடவடிக்கைகள் தேர்தல் ஆணையம் வகுத்துள்ள அறிவுறுத்தல்களுக்கு அப்பாற்பட்டவை என காவல்துறை அதிகாரியிடம் விளக்கிக் கூறினார்.  

 தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web