கலெக்டர் ஆபீஸில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்... விடிய விடிய லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை!

 
லஞ்சம்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நடத்திய அதிரடி ஆய்வின் போது, கணக்கில் வராத லட்சக்கணக்கான ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 5ம் தளத்தில் ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு பணிகளுக்கும் அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாக தொடர்ந்து புகார்கள் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று மாலை உதவி செயற்பொறியாளர் மோகன் பாபு உள்ளிட்ட அதிகாரிகள் பணியில் இருந்த போது, ஒப்பந்ததாரர்கள் சிலர் அங்கு வந்திருந்ததாக தெரிகிறது. 

ஈரோடு

திடீரென அலுவலகத்திற்குள் நுழைந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு வந்திருந்த ஒப்பந்ததாரர்கள், உதவி செயற்பொறியாளர் மோகன் பாபுவுக்கு லஞ்சம் கொடுக்க வந்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து 10 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஈரோடு

தொடர்ந்து அவர்களிடம் விடிய விடிய விசாரணை நடத்திய போலீசார், பணத்தை பறிமுதல் செய்ததோடு மோகன் பாபு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த அதிரடி ஆய்வு காரணமாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. விசாரணைக்கு பின்னர் மோகன் பாபு கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web