பள்ளியில் ஜாதி பிரச்சனை.. மோதலில் மாணவர்கள் காயம்.. போலீசார் தீவிர விசாரணை!

நெல்லை வள்ளியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏற்பட்ட மோதலில் 2 மாணவர்கள் காயமடைந்த நிலையில், 13 மாணவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். நெல்லை மாவட்டம் வள்ளியூரில் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை பள்ளி கழிவறை சுவரில் குறிப்பிட்ட ஜாதியை இழிவுப்படுத்திப எழுதப்பட்டதாக தகவல் வெளியானது.
அப்போது 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில், இரண்டு மாணவர்களுக்கு லேசான ரத்த காயம் ஏற்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த வள்ளியூர் டிஎஸ்பி யோகேஷ்குமார் தலைமையிலான போலீசார், அந்த பள்ளியில் படிக்கும் பத்துக்கும் மேற்பட்ட மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!